பார்த்தா கண்ணு சுளுக்கிக்கும், வாசிச்சா வாய் சுளுக்கிக்கும், நெனைச்சா நெனைப்பு சுளுக்கிங்கிற மாதிரி எழுதிட்டு, அத கவிதைன்னு சொல்லுற கவிஞ்சர்களுக்கு மத்தியில சமகாலத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச கவிஞர்கள் அண்ணன் நேசமித்திரனும், போகன் சங்கரும், இவுங்களப்பத்தி நான் சொல்லுறது இருளில் கருமைய கலப்பது போன்றது. சில கவிதைகள் தீவிர இலக்கண விகுதிகள் மிகுந்து மீள்வாசிப்புக்கு உங்களை உட்படுத்தினாலும் படிக்கச சுவாரசியமானவை,....கவிதையின் உட்கூறுகள் புரிபடாமல், அதனை சபிப்பது எனது வாசிப்பின் குறைபாடேயன்றி கவிதையின் அல்ல. 

கவிதைகள் எனக்கு அறிமுகமானது உதயா மாமாவினால், பாரதியார் கவிதைகள் புத்தகத்தை என்னை நம்பி கொடுத்த புண்ணியவான். அதன் பின் பருவகாலங்களில் தபூசங்கரில் லயித்துகிடந்தேன்.....இணையம் வந்த பின்பு ஏராளமான கவிஜ,சில கவிதைகள் எல்லாம் படிச்சதுல இவுங்க ரெண்டுபேரும்தான் என்னை பசக்குன்னு உள்ள ஈர்த்துகிட்டவங்க.இணையத்துலயும் முகநூலிலோயும் துடிப்பா இருப்பாங்க இருக்காங்க....அண்ணன் போகன் எழுதும் கட்டுரைகளுக்கும், அண்ணன் நேசமித்ரன் பதியும் படங்களுக்கும் நான் அடிமை. நீங்களும் இவ்விரண்டுபேரையும் தொடர்ந்து பாருங்க...சுவாரசியத்துக்கு நான் கியாரண்டி.....


சாம்பிள்ஸ் :----

சுற்றிலும்
எந்திரங்கள் உடையும் ஓசைகள்
உதிர்ந்துகொண்டேயிருந்த
நகரத்தின் நடுவில்
ஒரு சத்தம் நீக்கிய
குளிரறையில்
அவள் என்முன்பு
ஆடையில்லாத உடலோடு நின்றிருந்தாள்

வானாகி
மண்ணாகி
வளியாகி
ஒளியாகி
புல்லாகி
பூண்டாகி
புழுவாகி
மீனாகி
மானாகி
இம்மையும்
அம்மையுமாய்
முலையாகி முலைக்கண்ணாகி
கடைசியில் யோனித்துளையுமாகி
அந்த உடலை அடைய
அவளுக்கு யுகங்கள் தேவைப்பட்டன

நான்
வெடவெடக்கும்
ஒரு நூறுரூபாய்த்தாளில் அடைந்தேன்

போகன் R
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரவு முடிந்த புதுப் பெண்ணுக்கு
எல்லோரையும் கண்ணுக்கு கண்
பார்த்து விட முடிகிறது

அப்பாவின் கண்ணில் மட்டும்
நிலைக் கண்ணாடி முளைத்தது  போல

முடைவதற்கு மடிக்கும் பச்சைஓலைகளின்
சப்தத்துடன் நெட்டி முறிக்கும் உடலை
என்ன செய்வாள் பாவம்

இப்போதும் அம்மாவை இன்னும் அணுக்கமாய்
அணைத்துக் கொள்ள முடிகிறது
தம்பியை தழுவும் போது கண்ணீர் விட
வெட்கமில்லை

கொல்லையில் தன்னைப் போலவே
இருக்கும் சிறுமியின் அழுகையைத்தான்
அவ்வளவு அச்சத்துடன் கடக்க வேண்டி இருக்கிறது....

நேசமித்ரன்....

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பார்வையிழந்தவர்கள் வாழும்
மரவீட்டில் பெய்யும் மழை
எனக்கு உன் பெயர்

நேசமித்ரன்....

சரி தலைப்பு கவிதை ருசிப்பவன்/இரசிப்பவன்னு தானே இருக்கணும், அப்புறம் எதுக்கு கவிதை சமைப்பவன் வச்சேன்னு தானே கேட்கிறீங்க....இதோ நான் சமைத்தது கீழே....சாப்பிட்டு செரிமானமோ இல்ல பேதியோ அது உங்க பாடு...

பற்றற்ற ஞானி...

பற்றியதோ யோனி.... [ நித்தி நியாவகம் வந்தா கம்பனி பொறுப்பல்ல ]