படத்தின்
அழகு ட்ரைலரில் தெரியும்
என்பதற்கேற்ப குறியீட்டு குருசாமி அண்ணன் லின்கூ சாமி ட்ரைலரில் வைத்த உலக
குறியீடாம்.... ‘’நான் மாபியோசோ சமோசா சாப்பிடணும்னா அத நான் தான் முடிவு
பண்ணனும். நீ மாபியோசோ சமோசா சாப்பிடணுமுன்னாலும் அத நாந்தான் முடிவுபண்ணனும்”னு சொல்லுறப்பவே உங்களுக்கு
தெரிஞ்சிருக்க வேணாம். அவுங்க சாப்பிட போற ‘’அந்த சமோசாவே’’ நீங்கதான்னு... அதையும் மீறி போகவேண்டியது
அப்புறம் வட்டகுதத்தில் வார்பிரும்ப வச்சு இழுத்தது போல லபோதிபோங்க வேண்டியது.
அண்ணன்
லிங்குவுக்கு,
இப்போ வர படங்கள்
கதைக்காகத்தான் ஓடுதுங்கிறது உங்களுக்கு தெரிஞ்சிருந்தும் வெறும் சதைக்காகதான்
வருவமுன்னு நம்பி எடுத்திருக்கீங்க. 3 குத்து பாட்டு வச்சதுக்கு நன்றிகள். நல்ல
வேள சூர்யாவ கொற சொல்லல. ஆமா ஜீ பிளாப் ஆனப்போ என்ன சொன்னிங்க.... அஜித்
ஒத்துழைக்கல. தொப்பைய குறைக்கலன்னு. சரி ஒத்துக்கிறோம். ஆனா அடுத்து வந்த
பீமாவுக்காக நீங்க தேங்கான்னா மாங்காய வந்து நின்னாப்பிடியே விக்ரம், அவருக்கு என்ன நியாயம்
செஞ்சிங்க? அந்த தோல்விகளுக்கு எல்லாம் captain of the ship ங்கிற முறையில நீங்க ஒதுக்கிட்டு இருக்க
வேணாமா? ஒங்களுக்கு சொல்லுறதுக்கு
ஆயிரம் காரணம் இருக்கலாம். அதையும் மீறி ஏங்க இப்படி படமா எடுக்கறீங்கன்னா? இந்த மாதிரி படம் எடுத்து
அதிலவரத நல்ல படத்துல போடுறேன்னுகூட சொல்லலாம். அதிலயும் நீங்க ஜெயிக்கிற
குதிரமேலதான் கட்டுறீங்க. மூடர்கூடம்,தலைமுறைகள், தா [ஆமாம் வெறும் தா] போல
படத்துக்கும் போடவேண்டியதுதானே. அதுகெடக்கட்டும். அது உங்க பணம் உங்க வியாபாரம், ஆனந்தம் போல் கதையாழம் மிக்க
படங்கள் திரும்ப உங்ககிட்ட இருந்து உங்க இரசிகரா எதிர்பார்க்கிறோம். அதுக்காக
இன்னொரு ஆனந்தம் அல்ல... ஒரு படைப்பாளி வெவ்வேறு தளங்களில் இயங்குறது
நல்லவிஷயம்தான்...ஒரே ஏரியால உச்சமும்/விழ்ச்சியும் அடைந்த தரணிய
பாருங்க...தில்-தூள் படத்துல கெட்டவன் தோப்பான் நல்லவன் ஜெயிப்பாங்கிறத முதல்பாதி
துரோகம் /ரெண்டாம்பாதி ரிவெஞ்சுன்னு பிரிச்சு மேஞ்சிருப்பாரு... ஆனா அதே
டெம்ப்ளேட்ல வந்த குருவிய நெனைச்சு பாருங்க/அத பார்த்த எங்க நிலமைய நெனைச்சு
பாருங்க.... நடிகருக்காக படம் பார்க்கிறோங்கிறது போயி டெக்னிசியன்களுக்காக படம்
பார்க்க வச்ச கூட்டத்துல நீங்களும் ஒருத்தர்....இன்னும் உங்கள் ரசிகனாக
உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்....
அண்ணன்
சூர்யாவுக்கு...
உங்கள் மீது பெருமதிப்பும்,பேரன்பும்
உண்டு...இதுபோன்ற வணிக குப்பைகளில் உங்களை சிக்கவச்சதுக்காக உங்ககிட்ட மானசீகமா
மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்...ஆம் உங்களை இந்த மாதிரி நடிக்கவச்சதே நாங்கதான்...
சூர்யா படம் என்ன பிடிக்குமுன்னு A சென்டர்ல கேளுங்க கஜினிம்பாங்க, B & C ல கேளுங்க சிங்கம் 1 & 2 ம்பாங்க, ஆனா எங்கள போல உங்கள் நலம்
விரும்பிங்கள கேளுங்க...தயக்கமே இல்லாம பிதாமகன்தான்னு சொல்லுவோம். ஏன்னா அதுல
பலதகிடுதித்தம் செய்பவராக வந்தாலும், அதிலெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சது லங்கர் உருட்டுற
பாத்திரம்...[எங்க கோவில் திருவிழாவில் பொண்ணுங்களுக்கு நரிகுறவங்ககிட்ட அச்சுமை
வக்கிறதும்/சேமியா ஐஸ்திங்கிறதும்----பசங்கன்னா கொடராட்டினமும்/லங்கர்கட்ட
உருட்டுறதும்தான் பொழுதுபோக்கு]... சோ லங்கர்கட்ட உருட்டுறவரு எந்த ஆங்கிள்ல பாப்பாரு/ஒக்காருவாறு/உருட்டுவாறுன்னு அச்சு அசலா டைரக்டர் சொல்லிக் கொடுத்தத
அற்புதமா உள்வாங்கி அட்டகாசப்படுத்தியிருப்பீங்க....அதே போல் கிளைமாக்ஸ்ல
சாக்குமூட்டைக்குள்ள இருக்கிறது..சான்சே இல்ல...பேரழகன்லையோ/அபேஸ் பாலையவோ கொடுத்த பாத்திரத்துக்குண்டான உழைப்ப போடுறதுல நீங்க ஒரு சின்ன
கமல். ஆனா உங்கள் நேரம் கெடந்து
ஆட்டுது...இந்தா முருகதாஸ் நல்லாத்தான் இருந்தாபுள்ள...ஏழாம் அறிவுன்னு
மொக்ககுடுக்கலையா..இப்போ அடுத்தது லிங்கு....
உங்களின் சமீபத்திய பேட்டியில
ரொம்ப தெளிவா/அழகா சொன்னீங்க படத்த பார்க்கதவங்களும் விமர்சிகிறாங்கன்னு...நல்ல
படத்த மக்கள் கைவிட்டதா சரித்திரம் இல்ல. ஆயிரம் உதாரணம் இருந்தாலும் எனக்கும்
உங்களுக்கும் தெரிஞ்ச ஒன்னு. முதல்வன் படம் ரிலீஸ். காலேஜ் முடிச்சு விரகனூர் ரிங்
ரோடு வரும்போதே நண்பன் செல்லுக்கு மெசேஜ் கிடைச்சது...முனிச்சாலையில இப்போ
பிரபலமான தொடர்மீன்கடைகளின் ஒனர் - அரசியல்புள்ளி வீட்டுவீட்டுக்கு சிடி
கொடுக்கிறாருன்னு/அதுபோக பிரபலமான லோக்கல் டீவிசேனலையும் போடுறாங்கன்னு....அந்த
ஏரியா நண்பன் வீட்டுக்கு போய் பாதியிலிருந்து படத்த பாத்துட்டு எங்க ஏரியாவந்தா
[செல்லூர்] எங்க வீட்டிலையும் அதே படம் ஓடுது....7மணி/9மணின்னு ஒரு சேனல்ல
முடிஞ்சா இன்னொரு சேனல்ல விடாம போடுறாங்க..இதுபோக சிடி வேற....அப்படி இருந்தும்
சிம்மக்கல் அண்ணாமலையில 1௦௦ நாள் ஒடிச்சு...எங்கஅப்பாவோட ஒருதடவ, அம்மாவோட ஒருதடவன்னு நானே
ரெண்டுதடவ பார்த்தேன்.. வழக்கமா பாட்டுக்கு கும்பலா ஓடுற கூட்டம் கூட, ஒண்ணு ரெண்டுபேர்தான் தம்
அடிக்க வெளியில போனாங்க, காரணம் ஷங்கரின் கதை சொல்லும்
உத்தியும், பாடல் படமாக்க எடுத்து கொண்ட
மெனக்கெடலும்தான்...ஆனா அஞ்சான் கதையே வேற...முகநூல்ல ஒரு சிலைட்ல யுவன
வாழ்த்தியிருந்தாங்க..என்னடான்னு பார்த்த பாடல் காட்சியில தம் போடவெளிய வரவச்சு
உசிர காப்பத்தினதுக்காகன்னு.... நல்ல படம் தோற்காதுங்கிறதுக்கு மிக சமீபத்திய
உதாரணம் கன்னட ‘’லூசியா’’
அண்ணே. இரசிகர்கள்
பாக்கெட்டுல இருக்க 12௦ ரூபாய்க்கு குறி வைங்க வேணாமுன்னு சொல்லல. அதுக்காக அவுங்களையே
குறிவச்சா எப்படி.யோசிங்க அண்ணே இந்தமாதிரி மொக்கையில எல்லாம் நடிக்கணுமான்னு...
வியாபார
நிமித்தமாக அண்ணங்களுக்கு [லிங்கு/சூர்யா]
ஒரு காடுன்னா சிங்கம் புலி
போக ஏனைய உயிரினங்களும் வாழ்வது போல 80/90களில் ரஜினி,கமல்,படம் மட்டுமல்லாம பிறநடிகர்கள் நடிச்ச
[நடிச்சாங்கதானே] படங்களும் ரிலீஸ்ஆகும், பெரியநடிகர்களின் படத்துக்கு டிக்கெட்
கிடைக்காதவங்களாலும்,இயல்பாவே சின்ன நடிகர்களின் ரசிகர்களாலும் நிறையும். [[உதாரணம்:- ஒரு தீபாவளிக்கு தளபதி மாமாவோடையும், குணா அண்ணாவோடையும், தாலாட்டு கேட்குத்தம்மா
அம்மாவோடையும், பிரம்மா அப்பாவோடையும், இராமராஜன் படம் காம்பவுண்ட்
ஆள்களோடையும் பார்த்த நியாபகம்] திரைத்துறையும் முதலுக்கு மோசம் இல்லாம இருந்தது.
ஆனா இப்போ அப்பிடியா வள்ளான் வகுத்ததே வாயக்காலுன்னு ஏன் உங்க ரெண்டுபேர் கதையையே
எடுத்துக்கலாம். சூர்யாவின் மச்சான் ஞானவேல் செஞ்ச அழிச்சாட்டியம் மறக்க முடியுமா
ஆல் இன் ஆல் அழகு ராசாங்கிற அமரகாவியத்த தூக்கிட்டா அடுத்த ஆறிப்போன பிரியாணிய
தரமாட்டோமுன்னு நல்ல படங்களுக்கு கிடைக்க வேண்டிய தியேட்டர
பிடிச்சுவச்சுகிட்டத்தையும், நீங்க உங்க இனத்த [இந்த
அஞ்சான வச்சு மெரட்டுனதையும்] மறக்க முடியுமா.... அஞ்சான் ஆக்டோபஸ் கரங்களால்
தியேட்டர வளைச்சு பிடிச்சிடுச்சு....ஆனாலும் ஒரு நல்ல விஷயம். இப்போ கதை திரைக்கதை
வசனம் படத்துக்கு தியேட்டர்களை அதிக படுத்துறாங்கன்னு....
அஞ்சான் டீசர் ஹிட்டுக்கு
பார்ட்டி வச்சிங்களே, நெட்ல எந்த கூட்டம் உங்க டீசர பார்த்துச்சோ அதே
கூட்டம்தான் உங்க ட்ரவுசர உருவுறாங்க...டீசர் ஹிட்டு...துட்டு வந்து
சேராதுங்கிறதும் உங்களுக்கு இப்போ தெரிஞ்சிருக்கும். உண்மையா படத்த ஹிட்
ஆக்கிறதும், ஒடவக்கிறதும் B&C ஆள்கள்தான், ஆனா அவுங்க எல்லாம் இன்னைக்கு
தியேட்டருக்கு வந்து பார்க்கிறமாதிரியா இருக்கு நிலவரம்...யானைவில,,குதிரவில,அப்புறம் எங்கே போவான்..திருட்டு VCDல தான் பார்ப்பான். ஆன்லைன்ல
பாக்கிறதுக்கு தல ஹாலிபாலி சொல்லுற யோசனப்படி செஞ்சா காசுபார்க்கலாம். இல்ல லண்டன்,ஜெனிவா ல இருந்து ரிலீஸ் பண்ணுற இணையதளங்களோடயாவது ஒப்பந்தமாவது போடலாம்.
அப்புறம் திருட்டுVCDய ஒழிக்கிறதுங்கிறது கடல்ல கரைச்ச
பெருங்காயம் போல..அட்லீஸ்ட் கீதப்ரியன் அண்ணன் சொல்லுற வழிமுறைகளையாவது பாலோ
பண்ணுங்க. http://geethappriyan.blogspot.com/2014/08/blog-post_23.html
அத
விட்டுட்டு சும்மா காமெடி பண்ணாதிங்க.
அப்பா
மதுரையில இருந்து கூப்பிட்டாரு..[சூர்யா மேல மதிப்பு அகரம் மூலமா] என்னடா அஞ்சான்
பார்த்தாச்சா? படம் எப்படின்னு... பரதம்,கிலுக்கம்,தாழ்வாரம்,ஸ்படிகம்,பெருந்தச்சன்னு
அறிமுகப்படுத்துனவருகிட்ட என்னத்த சொல்ல...அப்பா இது உங்களுக்கான படம் இல்ல..மீறி
உங்ககிட்ட பொறுமையும் நேரமும் இருந்தா போங்கன்னு சொன்னேன். என்னடா நீ இப்படி
சொல்லுற..இங்கே தங்கரீகல்ளையும்/ஐநாக்ஸ்ளையும்யு கெடந்து அழியுராங்கன்னாரு....நல்ல
வசூல் போல...போட்ட காசுக்கு மேலேயே எடுத்துட்டாங்க.
இணைய
இளவல்களுக்கு...
படத்த
பார்த்து/பார்க்காம விமர்சனம் பண்ணுங்க கவலையில்ல. ஆனா தனிமனித தாக்குதல்களை
தவிருங்க..இணையவெளியில கொட்டிகிடக்குது சூர்யாவையும் லிங்குவையும் பத்தி,. அதை
விடுத்து விமர்சனம் பண்ணனுமுன்னா ஆக்ஸ்போர்டுல படிச்சிருக்கணும்,அமிஞ்சகரையில குத்தவச்சிருக்கணுங்கிறத அடியோட வெறுக்கிறேன்.
பாராட்டவோ/விமர்சிக்கவோ எல்லோருக்கும் இணையவெளியில் இடமுண்டு... எழுதினது மொக்கையா
இருந்தா [இப்போ நான் எழுதினது போல] எகிறிஅடிங்க...அத விட்டுட்டு விமர்சிக்க தகுதி
இல்லைனா பின்னால சிரிப்பேன்....
இது
ஒரு நல்ல ஆரம்பம்..இணைய மொண்ணைகள்-முகமூடி-சோடாமூடி சொன்ன பார்டிங்கயெல்லாம்
அய்யயோ அம்மம்மாங்கறப்போ எவ்வளோ சந்தோசமா இருக்கு...
விமர்சனம்
வருதுங்கிறத ஒத்துகிட்டதே ஒரு சாதனைதான்...
இவ்வளோ
வக்கனையா பேசுறயே விமர்சனம் எங்கன்னுதானே கேட்கிறீங்க....
அட
போங்க பாஸு... அலெக்ஸ் பாண்டியனையே பார்த்துடோம். அஞ்சானை பார்க்க மாட்டோமா...
இனிமேதான் பார்க்கணும் J
p.s
:-
அடுத்த
படத்துக்கு எண்ணிஏழே நாளுன்னு குறியீடா சொல்லுறாப்பிடி சூ....சூதானமுன்னு சொல்ல
வந்தேன்.

0 Comments