நடிகர் மோகன் - மைக் மோகன் அல்ல....

நடிகர் மோகனை வெறும் மைக்மோகன்னு சொல்லுறதில் எனக்கு உடன்பாடில்லை.. அவரு படத்துல்ல மைக்க பிடிச்சுகிட்டு கொனஸ்டைகள் பண்ணுறத பாக்கிறப்போ எரிச்சமண்டும் இருந்தாலும்கூட ஜீவனாவாய் அசைக்கிறதயும், கையால காத்துல படம் போடுறதையும் ரசிக்கலாம்..அப்கோரஸ் சில....இல்ல... இல்ல... பல படங்களில் மைக்க முழுங்கி இருந்தாலும் நிறைய டிபரென்ட் கேரக்டர்ல நடிச்சிருக்காருங்கிறத நாம ஒத்துகத்தான் வேண்டும். அப்படி அவர் வெரைட்டியா நடிச்ச படங்கள்ல உங்களுக்கும்/எனக்கும் தெரிஞ்சது கீழ :-

காட்டுக்குதிரையில Y.விஜயாவால காமவேட்கைக்கு பலியாக்கப்படுற அறியாபையனாவும், பாடு நிலாவேல சோப்ளாங்கி கான்ஸ்டபிளாகவும், உதயகீதத்துல மரணதண்டனை கைதியாவும், ரெட்டைவால் குருவியில ரெண்டுபொண்டாட்டிக்காரனாவும் [அதுவும் பிரசவ சமயத்துள்ள ரொம்ப காமெடியா குன்ஸா இருக்கும்] உருவத்துல கொடூரமான மேக்கப்போட பேயாவும், ராகவேந்திரர்ல பக்திமானாகவும், கிளிஞ்சல்கள்ல காதல்தோல்வியால தற்கொலை பண்ணிகிறவராவும், நூறாவதுநாள்ல சைக்காகவும்,கோபுரங்கள் சாய்வதில்லைல மனைவிக்கு துரோகம் பண்ணுறவராவும்,விதில கற்பைகளவாங்குற காமந்தகனாகவும் [[முக்கியமா டைப்பிங் கத்துக்கிறப்போ இவர ஆச்சி அந்த ஒட்டு ஓட்டுவாங்க, ஆனாலும் கருமமே கண்ணாயினார கடமைய செய்வார் J ]], சகாதேவன் மகாதேவன்ல காமெடியாகவும், இதயகோவில்,மெல்ல திறந்தது கதவு போன்ற ஏனைய படங்களில் லவ்வர் பாயகவும்...மிக அதிக படங்களில் வேற ஹீரோக்களோடயும் சிவகுமார், கார்த்திக்.சத்யராஜ்,பிரபு,விஜயகாந்த்,பிரதாப்போத்தன், ஜெயசங்கர்,சிவாஜி,பிரேம்நசீர்,ரஜினி,கமல் போன்ற ஆளுமைகளோடையும் முக்கியமா எனக்கு ரொம்ப பிடிச்ச ஷங்கர்நாக்கோடயும்] நடிச்சிருக்கார். சில படங்களல்ல கெஸ்ட் அப்பியரன்ஸ் வேற

இவர் நடிச்சதுலையே ரொம்பபேருக்கு பிடிச்ச மெளனராகம் கேரக்டர்தான் எனக்கும் பிடிச்சது... மதுர அலங்கார்ல 26தடவ ரீ-ரிலீசான அந்த படத்த பாக்குறப்போ பின்சீட்டுல ஒரு கமெண்டு கந்தன் முதல்இரவு காட்சியில மோகனை அடிச்ச கமெண்ட் போடா உஸ்ஸு...பொண்டாட்டிய உழுகதெரியல, நான் வேணுமுன்னா வரவான்னான்...11 மணி காட்சிக்கு போற பண்ணாடை எல்லாம் காவியம் பாக்க வந்தா பின்ன இப்படித்தான்னு தலைவிதியேன்னு படத்த பார்த்துட்டு வந்தேன். இப்பவும் டைம்கெடைச்சா நெட்ல பார்ப்பேன்.

ஒரு பேட்டில சுகாசினிகூட அப்போ பிரபல ஹீரோயின்களோட அம்மாகளுக்கு, தன் பொண்ணுகளுக்கு மோகன் மாதிரி பையன் கிடைக்கணுமின்னு சொல்லுவாங்கன்னு சொல்லியிருந்தாங்க....அப்போ இவரபத்தி வந்த கிசுகிசுங்க கம்மி [சுரேந்தர் டப்பிங் பிரச்னை] 

இப்போ சொல்லுங்க இத்தனை வெரைட்டி காட்டுன மனுசன மைக்க வச்சு வரட்டி தட்டுறதுல எனக்கு உடன்பாடு இல்ல. அப்போ உங்களுக்கு ??



இப்போ எதுக்கு இந்த எஸ்.டி.டீ வரலாறுன்னு தானே கேட்கிறீங்க. எல்லாத்துக்கும் காரணம் அண்ணன் ஜாக்கி எழுதுன்ன இந்த பதிவுதான் காரணம்.

Post a Comment

0 Comments