இன்னொரு உலக யுத்தம் எதுக்காக வருதோ இல்லையோ...கண்டிப்பா தண்ணிக்காக வருமுன்னு அறிஞர்கள் சொல்லுறததிலேயும் நியாயம் இல்லாம இல்ல..ஏன் இந்த திடீர் பொங்கலுன்னு தானே யோசிக்ககிறீங்க. இந்த உலகத்த நெனச்சேன்....இல்ல..இல்ல..இப்போ நான் இருக்கிற சவூதிய நெனைச்சேன்...இங்கே பெட்ரோலுக்கும்,தண்ணிக்கும் இடைப்பட்ட பண வேறுபாட்ட பாக்கலாம்....

பெட்ரோல் :-
                                இங்கே 2 டைப் பெட்ரோல் விக்கிறாங்க--- 91ங்கிற நார்மல் பெட்ரோலும், 95ங்கிற பிரீமியம் பெட்ரோலும்..91ஒரு லிட்டர் 0.45 ஹலாலா [ஹலாலாங்கிறது நம்ம ஊரு சில்லறை மாதிரி] 95ஒரு லிட்டர் 0.60 ஹலாலா.. இன்னைக்கு வெலைவாசிக்கு ஒரு லிட்டர் முறையே ஏழு ரூபாயும்/9.5௦ ரூபாயும் நம்ம ஊர் மதிப்புக்கு ஆகுது.எங்க வண்டிக்கு 95பெட்ரோல் - இருவத்திநாலு ரியால் குடுத்து நாப்பது லிட்டர் புல் பண்ணக்கிறேன். ஒரு மாசம்/ஒன்னரை மாசம் தாங்கும். 

தண்ணீர் :-
                   முதல் தரமான அல்-அயன் 22 லிட்டர் கொண்ட வாட்டர்கேன் ஏழு ரியால்[1௦9 ரூபாய்], அதற்கடுத்து குவாலிட்டி 5 ரியால்[79 ரூபாய்],தங்க்ஸ் ஒரு தண்ணிபுழங்கி, மாசத்துக்கு 5 கேன் யூஸ் பண்ணது [2+3] சோ எப்படி பாத்தாலும் 3௦ ரியால் ஆகிடுது, இது இல்லாம லக்கி குடிக்கிற/அவளுக்கு செர்லாக் கலக்க வாங்கிற பேபிவாட்டர் -  2 லிட்டர் நாலு ரியால் /மாசத்துக்கு நாலு பாட்டில் 16 ரியால் சோ ஒரு மாசத்தோட தண்ணிக்கான செலவு - 46 ரியால்...

பெட்ரோல விட ரெண்டுமடங்கு தண்ணியோட வெல...மே பி...இந்த கணக்குல கொஞ்சம் முன்ன பின்ன மாறியிருக்கலாம், நீங்க வசிக்கிற நாட்ல.....

                  ஒரு 80 வயசு வரை வாழப்போற மனுஷன் தன் குழந்தை டு முதுமை பருவ வாழ்நாள்ல குடிக்கமட்டும் பயன்படுத்துற குறைந்தபட்ச தண்ணியோட அளவு  43,830 லிட்டர்கள். அப்போ மத்ததுக்கு எவ்வளவு செலவு ஆகுமுன்னு நீங்களே கூகுளாண்டவர பாத்துகங்க. சோ தங்க்ஸ் மாதிரி தண்ணி புழங்கிங்க...சிக்கனமா செலவு பண்ணுங்க.... தண்ணிய வச்சு மிகப்பெரிய அரசியல்/பிஸினஸ் நடக்குது...எங்க குரு ஓமன்ல கடல்தண்ணிய குடிதண்ணியா மாத்துற கவர்மெண்ட் பிளான்ட்லதான் வேலை செய்யுறார்....நண்பர் ஒருத்தர் டாட்டா குட்டியானைய தண்ணிவண்டியா மாத்தி ஓட்டுறாப்புடி...நல்ல வரும்படி...கூடுதலா 2 வண்டி வாங்கிட்டாரு...கேணியில தண்ணி நெரப்ப வண்டிக்கு இருநூறு ஆகுது போல..டீசல்,மெயிண்டனன்ஸ்,டிரைவர் பேட்டா எப்படி பார்த்தாலும் லாபமே...

தண்ணி விஷயத்துல நான் கீழஇருக்க மூணு விஷயத்துல கண்ட்ரோலா இருக்கலாமுன்னு நினைக்கிறேன்...

1.    வாஷ்பேசின்ல தண்ணிய தெறந்துவிட்டுகிட்டே பல்லுவெளக்குறதயும்...
2.    சின்க்ல தண்ணிய தெறந்துவிட்டுகிட்டே பாத்திரம் கழுவுறதயும்...
3.    சேவ் பண்ணுறப்போ வாஷ்பேசின்ல தண்ணிய தெறந்துவிடுறதயும் நிப்பாட்டனும்...

 தண்ணி சிக்கனத்தை கச்சிதமா நம்மளுக்கு கடத்துற ரெண்டு காணொளிப்பதிவுகளை கீழ கொடுத்திருக்கிறேன் மறக்காம பாத்திருங்க....


தண்ணீர்...தண்ணீர்..