Conversations with Mani Ratnam

                                   பட்டை தீட்ட தீட்டத்தான் வைரம் மிளிரும். விமர்சிக்க விமர்சிக்கதான் படைப்பாளியின் திறன் பரிமளிக்கும்.. . அதற்காக காலம் முழவதும் விமர்சிக்கும் மாதிரியான படைப்பை தருவதும், அல்லது கையில் கிடைத்ததற்காக எழுத்தில் ஆசிட் அடிப்பதும் -நட்புக்காக மயிலிறகால் வருடுவதுமாகிய விமர்சனமல்லாது நடுநிலை விமர்சனம் யாதெனில் படைப்பின் நிறைதனை கொண்டாடுவதும் -குறைதனை இடித்துரைப்பதுமாகின் அது யாவர்க்கும் இன்பம் பயக்கும்.

மேலே உள்ளது விமர்சனத்தின் மீதான எனது புரிதல் மட்டுமே.

                                     இதுலயெல்லாம் சேத்தியில்லாம ஒரு பாஸ்போர்ட் போட்டோவுக்கு போஸ் கொடுக்கவோ/எடுக்கவோ தெரியாத நீ எல்லாம் விமர்சிக்க கிளம்பிட்ட, மொதல்ல யூ டுயூப்ல ஒரு குறும்படம் எடுத்துகாட்டிட்டு பின்னாடி வந்து விமர்சனம் பண்ணுனா..இந்த முட்டாள் வாதங்களை எளிதில் புறந்தள்ளி விடலாம்.

                                     இதுக்கப்புறம் சுயஎள்ளல் மாதிரியான சுய மதிப்பீடு..தன்னைத்தானே / தனக்குத்தானே சீர் தூக்கி பார்த்துகொள்ளுதல். இது எளிதில் எவர்க்கும் கைகூடாது.
எளிய உதாரணம்...டைரக்டர்.சுசிந்தரன்...தனது வாழ்நாள் திராபையான ராஜபாட்டைக்கு பிறகான அவரின் பாய்ச்சல் நாம் அறிந்ததே.

                                      சரி விஷயத்துக்கு வரேன். இப்போ இணையத்துல நல்லா ஓடிகிட்டு இருக்குற  Conversations with Mani Ratnam புத்தகத்தை பத்திதான்  பார்க்கலாம். திரு.மணிரத்தினம் அவர்கள் திரு. பரத்வாஜ் ரங்கனால் பேட்டி எடுக்கப்பட்டு அது பெங்குவின் பதிப்பகத்தால ஆங்கிலத்திலும்/கிழக்கு பதிப்பகத்தால அரவிந்த்குமார் சச்சிதானந்தம் அவர்களால தமிழில் மணிரத்னம் படைப்புகள் - ஓர் உரையாடல் என்ற பெயரில் வந்ததும் உங்களுக்கு தெரியும்.

                                      நான் புத்தகத்த பத்தின என் கருத்தையோ / விமர்சனத்தையோ பகிர்ந்துக்க போறதில்ல. மாற இந்த புத்தகம் குறித்த இணையத்தில் கிடைக்கும் விமர்சனங்களை தொகுத்திருக்கிறேன்.  முதலில் இணையதள விமர்சகரும். திரைக்கதை மருத்துவருமான அன்பர். திரு.கருந்தேள் அவர்களின் விமர்சனங்களை பாப்போம்.

                                       இந்த புத்தகத்தின் ஆங்கில வெர்சனின் முன்னுரையை படிச்சுபுட்டு தேளு பேஸ்புக்ல போட்ட நிலைத்தகவலில் Facebook  ரங்கரை ஆல்வார்க்கடியான் ரேஞ்சுக்கு  ஓட்டுனத லைக் பண்ணுன 149 ஜீவன்களில் அடியேனும் ஒருவன். அப்போ என் மனசில் தோன்றினது எல்லாம்...வின்னர் பட டயலாக்கு மாதிரி..முன்னுரைக்கே இப்படின்னா ....புத்தகம் [விமர்சனம் வந்தா] உயிரோட இருக்குமுன்னா நினைக்கிற நீயின்னு ..என்ன நானே கேட்டுகிட்டேன்.

                                         அதுவும் அவர் பாகம்/பாகமா பிரிக்க போறாருன்னு தெரிஞ்சவுடனே ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தேன். அப்படி இல்லாம நடுநிலை விமர்சனம்னா என்னன்னு அவரோட புக் ரிவியூவ படிச்சி தெரிஞ்சுக்கலாம். எடுத்துகிட்ட விவாதத்த ரொம்ப நேர்மையா /சுவாரசியமா என்ன போல விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் பிடிச்சமாதிரி தந்திருக்கார். பேசாம இவரையே மொழி பெயர்க்க  வச்சிரூக்கலாம். இது எனது எண்ணமேயன்றி -  இப்பொழுது மொழிபெயர்த்தவரை தாழ்த்துவது அன்று.  

அன்னாரின் விமர்சன பூக்கள் மாலையாக....

PART.1
PART.2
PART.3
PART.4

                                    நாம் அடுத்து படிக்க இருப்பது. கொஞ்சம் பிசகினாலும் இலக்கிய வெளியில் நம்மை தொபுக்கடீர் என விழச்செய்யும் அபாயத்துக்கு சொந்தகாரர். சுவாரசியத்தின் சூறாவளி அண்ணன்.திரு.சுரேஷ் கண்ணன் அவர்களின் விமர்சனம்.

''பல கேள்விகளுக்கு மணிரத்னம் மிகுந்த ஜாக்கிரதையுணர்ச்சியாகவும் தன்னுணர்வுடனும் எச்சரிக்கையாகவும் பதிலளித்திருப்பது இந்த உரையாடலுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்துகிறது. தம்முடைய படைப்புகளின் மீது நிகழும் அறுவைச்சிகிச்சையை அவர் விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது. சில கேள்விகளுக்கு சர்ச்சையைத் தவிர்க்க வேண்டி அவற்றை நாகரிமாக தாண்டிச் செல்கிறார். - திரு.சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணனின் விமர்சனம்

மேலும் சில

Vaanathinadanam
Oliyudayon

மணிரத்னம்-படைப்புகள்--ஓர்-உரையாடல்.online

மணிரத்னம் படைப்பினில் எனக்கு பிடித்தவை வரிசை கிரமமாக  ....

அஞ்சலி
மௌனராகம்
நாயகன்
அக்னி நட்சத்திரம்
தளபதி
ரோஜா
இதயத்தை திருடாதே
பாம்பே
பகல் நிலவு
இருவர்
திருடா.திருடா
அலைபாயுதே
உயிரே
கன்னத்தில் முத்தமிட்டால்
குரு
ஆயுத எழுத்து
உணரு
பல்லவி அணு பல்லவி
கடல்
ராவணன்
இதய கோவில்

மணிரத்தினம் பங்களிப்பில் எனக்கு பிடித்தவை வரிசை கிரமமாக  ....

சத்திரியன்
ஆசை
தசரதன்
காயம் [துர்கா]
நேருக்குநேர்
டும் டும் டும்
பைவ்ஸ்டார்

மேலே கூறியிருப்பது எனக்கு பிடித்த வரிசை மட்டுமே...இல்ல உனக்கு வரலாறு தெரியல நீ கீழே
குறிப்பிட்டிருக்கும் சில படங்கள் அவை வெளியாகும் போது எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திச்சு தெரியுமா எனும் பெருசுகள் கொஞ்சம் ஒத்துங்கோ....

எனக்கான படத்தை. நான் பார்த்து, அது எனக்குள் எழும் தாக்கத்தையும், என் புரிதலின் வெளிபாட்டையும் - உங்கள் கண்கொண்டு நான்பார்க்கவியலாது...

எங்கிருந்து லிங்குகள் எடுக்கபட்டதோ அங்கேயே முழுநிறைவுடன் வைக்கபடுகிறது.

முடிவாக

இங்கே வந்து உன் ப்ளாக்கில் நீ குடுத்த லிங்கை படிக்கிறதுக்கு நாங்க அவுங்க ப்ளாக்கிலேயே போயி படிப்போங்கிறவுங்களுக்கு

நீ நிரூபிச்சா எனக்கென்ன ...நிரூபிக்காட்டிஎனக்கென்ன?
                      - ஏதோ ஒரு மகான்.

நீங்க  இங்க வந்து படிச்சா எனக்கென்ன ...படிக்காட்டி எனக்கென்ன?
                      - கணேஷ்.

Post a Comment

0 Comments