என்‬ மனைவிக்கு நான் தாலி கட்டல..

தாலின்னு ஒரே ஒப்பாளமா இருக்குதே.. தமிழ்நாட்ல தாலியே இல்லமா கல்யாணம் நடக்குதே தெரியுமா ?

ஒக்கலிக கவுடா [கெளடா] காப்பிலிய கவுடர் /படவனார் குலம்/இன்னும் பல பிரிவை சேர்ந்தவர்கள் தாலி அணிவதில்லை...

கம்பம்/போடிமெட்டு/திண்டுக்கல்/சின்னாளபட்டி/வதிலை/நிலவை/மதுரை/கோவை இன்னும் பல இடங்களிலும் பல்கி பெருகிய இவர்கள் இன்னும் தாலி அணிவதில்லை.

கம்பம் ராமகிருஷ்ணன்/ கோவை ஒ.ஆறுமுகசாமி கவுடர்/மேட்டுபாளையம் [லேட்] PSR போன்ற முக்கிய பிரமுகர்கள் உள்ள பலபிரிவு அடங்கிய கூட்டம்உள்ளது.

இப்போவாவது தாலி செயின்ல கோர்கிறது பேஷன், பட் அந்த காலத்தில தாலிகயிறு இல்லாம பெண்கள் நிலைய நினைச்சு பாருங்க.

கழுத்துல தாலிஇல்லாததால காதல் திருமணம்/ஊர விட்டு ஓடி வந்துட்டாங்க இதுபோல தெருவே பேசும் .. பிறவு ரெண்டுவீட்டு ஆள்களும் வந்து போக இருக்கவும்தான் தாலிங்கிற சடங்கே இல்லங்கிற வழக்கம் தெரிஞ்ச பின்ன இதுஎன்னடி புதுகதையா இருக்கேன்னு தெருஜனம் ஆசுவாசம் ஆச்சு...

தாலி வெறும் கயிறு....என் வரையில.. மீனாட்சி திருக்கல்யாணத்துல
தாலிசெட் கும்பிட போறவுங்களுக்கு குடுப்பாங்க..வாங்கி யாருக்காவது குடுத்துடுவோம்...

நேத்திகடன் தீர நண்பர்கள் யாரவது வினியோகிக்க சொன்னா உரிய மரியாதையோட வினியோகிச்சிருக்கோம். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு  
smile emoticon

இதில்லாம தாலிக்குகாவல்/தாலிகாத்த அம்மன்/தாலியே வேலின்னு பொங்குற ஒட்டுபெறக்கும் சாரி ஒட்டு வாங்கி கட்சி எதுவும் இந்த சமுகத்த ஓதிக்கிட இல்ல.. இங்கேயும் MP/MLA/MINISTER எல்லா கேட்டகிரிலயும் ஆட்கள் இருக்காங்க. வரிசையா ஸீட் குடுத்துக்கிட்டு தான் இருக்காங்க.


தாலின்னா என்னன்னு தெரியாத ''சின்னதம்பி'' யா அலைஞ்சது ஒரு காலம்.

Post a Comment

0 Comments