#லக்கி அப்டேட்ஸ் # 2

குழந்தைகளுக்கு ஏன் கார்டூன் பிடிக்கிதுன்னு நானா யோசிச்சப்பதான் இத கண்டுபிடிச்சேன்...

அடுத்தடுத்த காட்சி நகர்வுகள் தொடர்ந்துகொண்டே இருக்குது. ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான இடைவெளி குறைவு.

லக்கிக்கு பக்கம் பக்கமா வசனம் பேசினா புடிக்காதுங்கிறது என் கணிப்பு. டிவி இல்ல லேப்டாப்பில் பாக்கிற கார்டூன் ரொம்ப வேகமா நகரணும். இல்ல அவ பாட்டுக்கு வேலைய பாத்துட்டு போய்கிட்டே இருப்பா. இத்தனை வருஷமாகியும் எனக்குபிடிச்ச ஆரம்பநிலை கார்டூன்தான், அவளுக்கும் பிடிக்கிது...

ஆனாலும் குழந்தைங்க எப்ப/எப்படி மாறுவாங்கங்கிறது..படைச்சவனால கூட முடியாதூங்கிறதுதான் நிஜம். அப்படி என்ன அதிர்ச்சி குடுத்தாங்கிறதுதான் மேட்டர்.

லக்கிக்கு எப்பவுமே கார்டூன், எப்பவாவது வீடியோபாட்டு பார்ப்பா. அன்னைக்கீன்னு பார்த்து படத்துல முக்கால்வாசி வசனமே பேசுற
பாலகிருஷ்ணாவோட சிம்ஹா முழுபடமும் பாத்ததோட இல்லாம ‘’சிம்மலாண்டி சின்னோடே வேட்டைக்கோச்சாரே’’ பாட்டக்கு ஆட்டம் போட்டது இல்லாம அத ரீபீட்ல போடசொல்லி ஒரே அழுகை.

குழந்தைய [லக்கிய] புரிஞ்சுகிறதுக்கு இந்த ஆயுள் போதாது போல....

கார்டூன்ல கார் :)

 
டாம் & ஜெர்ரி 

ரீவைண்ட் பண்ணி பார்க்கிறார்

Post a Comment

0 Comments