#லக்கி அப்டேட்ஸ்#1

நாளொரு ரவுஸும் பொழுதொரு குறும்புமா வளர்கிறாள். சிலசமயம் 
நாங்கஇவள வளக்கிறோமாஇல்ல இவ எங்கள வளக்கிறாலாங்கிற சந்தேகம் தீந்த பாடில்ல....

இவகிட்ட தங்க்ஸ் ஓரண்டஇழுத்து ரப்பு வாங்கிறதே வேலையா போச்சு. ஒவ்வொருநாளும் வேல முடிச்சு வீட்லநுழையும்போதே எதாவது ஆச்சர்யம் காத்துகிட்டு இருக்குது. இரு குறும்புகள் கீழே :-

பறக்கும் முத்தம் :-

லக்கிக்கு அல்ரெடி ஷேக்ஹேண்ட் குடுக்குறதுடாட்டா காட்டுறதுன்னு தங்க்ஸ் சொல்லி குடுத்திருந்தாலும்,பிளையிங் கிஸ் புதுசு. இன்னைக்கு வீட்ல நுழையிரப்பவே தங்க்ஸ் டெமோ காட்னாங்க.

மிளகா கடிச்சவனாட்டம் உஸ்ஸுன்னு வுதட்ட கடிசிக்கிட்டுவாய்மேல போடுங்கிற மாதிரி உதட்டுல மூணுதடவ ஒத்தி எடுத்து
என்னபாத்து கையநீட்டி சிரிக்கிறாரு. [கோடிரூபா தகும்]

சாமி :-

சாமி காப்பாத்துன்னு சொன்ன உடனே சாமி படத்துகிட்ட போயிபடத்த தொட்டு மூணுதடவ [ஒரு தடவ நெஞ்சிலையும்மீதி ரெண்டு ரெண்டு கண்ணுக்கு]
ஓத்திக்கிறாரு. தங்க்ஸ் உச்சியில குங்குமம் வக்கிறத பார்த்திட்டு அதே போல விபூதிய எடுத்து காதுக்கு மேல பூசிக்கிறாரு. டைரக்டா மூளைக்கு அருள ட்ரான்ஸ்பர் கேக்கிறாரோ என்னமோ. பக்தி பரவசத்துக்கு ஒரு அளவில்லாம போயிகிட்டே இருக்கு. ராத்திரி ஒருமணிகெல்லாம் சாமிகாப்பாத்துன்னா அப்புறம் எங்களயாரு காபத்துறது.

உம்மாச்சி கண்ண குத்துமானெல்லாம் தெரியாது. பட் சாமி போட்டோகிட்ட கூட்டிட்டு போகல எங்க அம்மாச்சி[லக்கி] இந்தியன் தாத்தா மாறி குத்தும்.

Post a Comment

1 Comments