டீக்கடையின் புன்னகை

கீழே கொடுத்துள்ள ஸ்டேடஸானது ஒரு திறமையான குறும்படமா பரிமளிக்ககூடிய சாத்தியகூறுகளை தன்னகத்தே கொண்ட செவ்வியல் ஸ்டேடஸ் ஆகும். இதை வெறும் ஸ்டேடஸ் கடந்துசெல்வதோ இல்லை இலக்கியமாக பருகுவதோ தாங்களை சார்ந்தது. படிச்சுப்பாருங்க

பேஸ்புக்கில் அண்ணன் 

மதுரவாயல் பைபாஸ் அருகே வழி கேட்க ஒரு டீக்கடையில் பைக்கை நிறுத்தி ஒரு டீ சொல்லி, சூடா என்ன இருக்கு என்று கேட்டேன். மெளகா பஜ்ஜி ஸார் என்று தட்டில் சட்னி ஊற்றி (2 nos) கொடுத்தார். அவர் வழி சொல்ல ஆரம்பிக்க, பஜ்ஜி எடுத்து சாப்பிட்டு, என்னங்க சூடே இல்ல என்று கேட்க இப்பத்தான் ஸார் போட்டது என்றார். பொதுவாக நான் எப்போதாவதுதான் ஜங்க் ஃபுட் சாப்பிடுபவன் என்றாலும்கூட எனக்குக் கொதிக்கக் கொதிக்க வேண்டும். அவரை ஏன் பொய் சொன்னீர்கள் என்று திட்டிவிட்டு டீ குடித்தேன். அதுவும் கண்றாவியாய் இருக்க பரவாயில்லை என்று குடித்துத் தொலைந்து, பார்த்தால் பாகெட்டில் வாலெட் இல்லை. வீட்டில் டைனிங் டேபிள் வைத்ததை எடுக்க மறந்திருக்கிறேன். காசில்லை. விஷயத்தை சொன்னேன். பரவாயில்லை ஸார் என்று விட்டுவிட்டார்... எல்லாம் முகராசி கொமாரு என்று கமுக்கமாய் நன்றி சொல்லிப் புன்னகைத்து எஸ்கேப்...உண்மைதான் நிலைக்கும்....

படிச்சாச்சா விஷயத்துக்கு வரேன். இதை படிச்சவுடனே அபிநயம் பிடிக்கணுமுன்னு [பெரிய அபிநய சரஸ்வதி] நெஞ்சுல தொக்கம் விழுந்துடுச்சு.

பிரபு அண்ணாச்சியா நானும்டீக்கடைகாரராக தங்ஸ்ஸும்ஒரே ஒரு பார்வையாளராக லக்கியும் நேத்து அறங்கேற்றம் நடந்துச்சு.
நியாயப்படி பார்த்தா தங்க்ஸ்தான் பி.அ. கேரெக்டர் பண்ண வேண்டியவங்க[பம்முறவேலை நஹி/ பாயுற வேலை பகூத் பசந்தே]....ஸ்கிரிப்ட்டை முழுசா படிச்சிட்டதால கடைசில ஜிலேபி [லட்டு மன்னிச்சு] மாறி பாயுற பெர்பார்மன்ஸ் இருக்கதால பெரிய மனசு பண்ணி டீ ஆத்த ஒத்துக்கிட்டாங்க.

அங்க டீ/ இங்கே ஜூஸ்.. அங்கே பஜ்ஜி / இங்கே வடை...

என் வாழ்வில் இதையொத்த அரிதினும் அரிதான சந்தர்ப்பம் இனியொருமுறை கிட்டில்ல மோனே கணேஷா எனும் குடும்பசூத்திரத்துக்கு இணங்க
சும்மா எகிறிஎகிறி அடிச்சிட்டு இருந்தேன் [மின்னற்கீற்று போல இறுதிகாட்சிகள் வந்து கெதுக் கெதுக்குன்னாலும் கெத்து காட்னேன்]

குடிச்ச ஜூஸும் குறையணுமே/கடிச்ச வடையும் கரையணுமேங்கிறதுக்கேற்ப கிளைமாக்ஸ் நெருங்கிச்சு. பர்சில்லா எதார்த்தம் சட்டென உறைப்பதை [ஸ்க்ரிப்ட் தெரியுங்கிறதால] நிகழ்வில நிகழ்த்த பிரம்ம பிராயத்தனம் எல்லாம் செய்யவில்லை.

சிம்பிளா வடிவேல் சந்திரமுகி பங்களாவில் மானைபாத்துட்டு புலின்னு பம்மும்போது அவரோட உடல் மொழிய கவனிச்சிருப்பிங்க. அதைபோலவும்எக்ஸ்ட்ரா கால்கட்டைவிரல் கோலம்போட்டதுக்கும் அவசியம் இல்லாமலேகடைக்கார அண்ணாச்சி போல வெள்ளந்தியா சிரிச்சு சரி பரவால்ல சார். போயிட்டு வாங்கன்னுட்டாங்க.

கிளைமேக்ஸ்
முடிவு=சுபம்..


உண்மையான கிளைமேக்ஸ்

மேல சொன்னமாறி முடிஞ்சிக்களாமுன்னு சொல்லலமுடிஞ்சிருந்தா நல்லா இருக்குமுன்னு சொல்லுறேன்.
பின்ன எனக்கு மட்டும் ஆசையா... தோள்ல கைய போடுறப்பவே உசாரகியிருக்க வேணாம். என்னத்த சொல்ல

எடோ நாயிண்ட மோனேன்னு [டீக்கடை-நாயர்] ஆரம்பிச்சு அச்சில ஏத்தமுடியாத மாறி அன்பா அர்சித்த்தையோ..இல்ல
தக்காளி மிதிச்ச மிதில கொடலு குந்தாணி எல்லாம் வாய்வழி வந்ததையோ சொல்லவா முடியும்..

இந்த ஒரு விஷயத்தில லக்கிய பாராட்டியே ஆகணும்.
தங்க்ஸ் என்னையவோ [பலசமயம்] / நான் தங்க்ஸயோ [சிலசமயம்] விளையாட்டா நைய புடைச்சா என் ஏதுக்குன்னு கேட்காம அடிக்கிற பக்கம் சேந்துக்கிட்டு தன்பங்குக்கு குத்துற குல்லுகபட்டர்.

இடிச்சபுளிமாறி மொத்த பெர்பார்மன்ஸ்சையும் பார்த்துட்டுகரெக்ட்டா தங்க்ஸ் தாக்கிறப்போ வந்து கம்பெனி குடுக்கிறா. என்னம்மா இப்படி பண்ணுறீங்களே லக்கிமா J

தி பெஸ்ட் பெர்பார்மன்ஸுக்கான உபரி பரிசுகள் :-

[மீண்டும் சந்திரமுகி வடிவேல் பாணில படிச்சுகங்க.]

பாத்ரமெல்லாம் கழுவனுமாம்வாசிங்மெஷின்ல இருக்க துணிய எடுத்து காயபோடணுமாம். சமைக்கணுமாம் [அ] ஹோட்டல்ல வாங்கிதரணுமாம்.

அதுனாலதான் மாப்பு... கோவாலு 6 மணிக்கு மேல பேஸ்புக்ல எந்த ஸ்டேட்டசையும் படிக்கிறதே இல்லையாம். மீறி படிச்சாலும் நவதுவாரதையும் சாதிக்கிட்டு லைக் போட்டுட்டு போயிக்கிட்டே இருக்கானாம்.

ரெண்டேபேர் இருக்கிறதால எவ்வளவு நேரம்தான் டிவி/நெட் பாக்க அப்பப்போ இந்த மாறி எதாவது பண்ணுறதுதான் எங்கள சுவாரசியமா வச்சுகிடஉதவுது.
சோ பொறுத்துகங்க.....

Post a Comment

0 Comments