சமகால என்வயதையொத்த இளைஞர்களை விட தெருகூத்து/புராணநாடகம் மீதான
ஈர்ப்பும், கண்டுரசித்தவையின் அடிப்படையில் ஒருபடி முன்னே இருப்பேன்.
பக்தி/சமூக நாடகம்/பாவை கூத்து என்ற நிலையிலிருந்து கீழிறங்கி
வள்ளிதிருமணம் என்ற நாடகத்தில் வந்து நின்றது, ராஜபார்ட்,கள்ளபார்ட்க்கு வேர்த்துவடியும் போது வரும் பபூன்களின்
ரெட்டைஅர்த்தங்களின் வழியாக ஒழுக்கம் தன் வடிகால் தேடிக்கொண்டது. என்னளவில்
ராஜபார்ட்டை விட இன்னொரு ஆளுக்கு பேர் கிடைக்குதுன்னா அது பபூன்
நிலவை[நிலக்கோட்டை] தாசப்பனுக்குதான். திண்டுக்கல்,மதுர,தேனி,கோம்பை,தேவாரம் போற
இடத்திலெல்லாம் ஜெயகொடிதான். எப்பவும் மாலை,அப்பப்போ பணமுடிப்பும் கிடைக்கும்.
எங்க அப்பாரு/என் காலம்வரை இன்னைக்கு என்ன நாடகம்கிறத விட தாசப்பன்
வாராறான்னு கேட்டு உறுதி செஞ்சுசிட்டுதான் போறது. வரல்லேன்னா போயி வறட்டு கத்த
கேட்கிறத விட பண்ணையம் பாக்ககிளம்பிடலாங்கிறது எங்க கட்சி.
பதின்ம வயதின் பாலியல்வடிகாலுக்கு ஏதுவான ஆட்டமாய் கண்டுகொண்டது
நத்தம் சாந்தியுடைய குறவன்/குறத்தியாட்டம். வெளீர் மஞ்சள்நிற இடுப்பில் ½ லிட்டர் எண்ணெய ஊதித்திகிட்டு
வாயா மோதிபாப்போம் என் பாறையுடையுதா இல்ல உன் உளியுடையுதான்னுன்னு ரெண்டுகுலுக்கு
குலுக்கி பபூன மல்லுக்கு இழுக்குறப்பவே சர்வம் சாந்திமயம்.
ரெண்டுடார்கெட்டான சிறுவன்[அ]முதியவரை தேர்ந்தெடுத்து இடிக்கிற இடியில
பொம்பளைங்க சாபத்த கொத்தோட கொண்டுபோயிடும். மதுரையில எங்க நடந்தாலும் விடமாட்டோம். தெருவுக்கு தெரு காளி/மாரியம்மன் கூத்து குறையாம அருள்பாளிச்சு
கிடந்தாங்க.
புதுகோட்டை முத்துமணி கரகமும் பேர்போன ஒண்ணு. நாடகத்த சமாதி ஆக்குனதுல
ஆடல்/பாடல் குழுவுக்கு முக்கிய இடம் உண்டு. மதுரைமிரண்டா எந்த சந்தில போனாலும்
இல்லாத மார்ப குளுக்கிகிட்டு ஆடிக்கிட்டு கிடக்காளுவ. டான்ஸ் பாக்கிற ஆசையே போச்சு, ஆந்திரால
வேலை பார்க்கிறப்போ நகரிபக்கத்துல பார்த்த நிர்வாண நடனமும் மறக்கமுடியாது [கவனிக்க
போலிஸ் பாதுகாப்போட] நடத்தினது
பானுபிரகாஷ் ரெட்டின்னு லேண்ட்லார்ட/லேண்ட் மாபியா
எங்கையோ ஆரம்பிஞ்சு எங்கையோ போகுது..திரு.வசந்தபாலன் பிரியாத்துகினிய
படைப்பாளி, அவரின் ஆல்பம் படம் எனக்கு ரொம்பபிடிச்சது. கேரளபாக்யராஜ் பாலசந்திரமேனன்
அறிமுகம். நல்ல பாட்டு இருந்தும் படம் சரிக்கிருச்சு. படமா எடுத்திருக்க இப்படி சவ
சவன்னு எடுத்தா எவன் பாப்பான்ன்னு ஜெயமோகன் கேட்டதா ஒரு பேட்டியில
சொல்லியிருந்தாரு. அதுக்கபுறம் ரொம்ப உக்கிரமான படைப்பான வெயில்
வந்திச்சு. அங்காடிதெருவுள்ள சோகத்த ரொம்ப பிழிஞ்சிருப்பாரு. காவியத்தலைவன் பாக்கபிடிச்சாலும்
ஏதோஒண்ணு குறையுதேன்னு இருந்தது. மருது ரொம்பசரியா மையசரட பிடிசிட்டாரு. அதுல
ரொம்ப பிடிச்சது மேடைபத்தின்ன அங்கலாய்ப்பு. ஆமாம் இப்பெல்லாம் அவனவன் பவுசகாட்ட
கலையரங்கமுன்னு கட்டிக்கிறான். சமீபத்துல நரசிங்கபுரத்தில பார்த்த மூங்கில்மேடை
ரொம்ப அருமையா இருந்துச்சு. வெறும் Lஆங்கிள்வச்சு வெல்டிங்பண்ணி அதுமேல பலகையை
போட்டு ஆடுற ஆட்டத்த நான் வெறுக்கிறேன்.
வெறும் விமர்சனமா இல்லாம படத்தின் தொய்வை சுட்டிகாட்டிஇருக்கிறார். படிச்சுபாருங்க J
மருது காவியதலைவன் உரை
0 Comments