மிருக காட்சி சாலை

மிருக காட்சி சாலைக்கு மட்டும் இல்ல. மனித மிருக காட்சி சாலையான பூங்காகளுக்கும் பேமிலிய கூப்பிட்டு போககூடாதுங்கிற முடிவுக்கு கொண்டு வந்திடுச்சு. கடைசி ‘’ECO PARK’’ விசிட். டான்சிங் கலர் வாட்டர் பார்க்க பாப்பாவ கூட்டிகிட்டு போகணுங்கிறது தங்க்ஸ் உத்தரவு.

பார்க்கோட கடைகோடில இருக்க இடத்துக்கு நடந்து போறதுக்குள்ள அங்கங்கே புதரா மண்டிகிடக்கிற குரோட்டன்செடிகளுக்கு மத்தில பாம்புபிணை நடனம்போல பின்னிபிணஞ்சு கிடக்குறானுவ. இவன் ஏன்டா தனியா பெஞ்சுல ஒக்காந்து தியானம் பண்ணுறான்னு பார்த்தா, தவள தண்ணில எட்டி பாக்கிறமாறி ஒரு பிள்ள அவன் மடில இருந்து எட்டிபாக்குது. பரோட்டாவுக்கு மாவு பிசையிற மாஸ்டர் முச்சூடும் இங்கேதான் திரியுறானுக. அந்த மாறி பண்ணாடைகள பத்தி பேச்சே இல்ல. இந்த பிள்ளைங்களுக்குதான் எத்தன தெகிரியம். பிடிச்சு நெட்ல விட்டா அப்புறம் குய்யோ முய்யோங்கவேண்டியது. ரொம்ப குஷ்டமாகி பக்கதுல இருக்கிற ராஜாஜி பார்க்குக்கு போனா அங்கே இதவிட மோசம். ஒருவழியா பார்க்முருகன் கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.

சமீபத்துல அஞ்சாதே பார்க்க யூடியூப்ல தேடபோயி அப்படியே குழந்தைங்க கடத்தல்ன்னு ஆரம்பிச்சு கடைசில அமெரிக்கால தன்னார்வதொண்டர் தனிவெப் ஆரம்பிச்சு கார்செக்ஸ்ல  ஈடுபடுற விலைமாதுகளையும், கஸ்டமர்களான ஆண்களையும் முகத்தோட பிடிச்சுகுடுக்கிறதுல வந்து நின்னுச்சு. செம கா[மெ]ம நெடி. மும்முரமாக இயங்குகிற போது, அவுங்கள பிடிகிறப்போ உடலுறவு தடைபடுத்தேங்கிறதேங்கிற கோவத்தில மக்கள் நடந்துக்கிறத நினைச்சா...[மார்கழி மாசத்து நாய்மேல கல்லெறியுறதுல அம்புட்டு சந்தோசம்] செம காமெடி.

முறை/முறைகேடு எல்லாம் காமத்துக்கு கிடையாது போல.



Post a Comment

3 Comments

  1. தலைவா... உண்மைய சொல்லுங்க.. அஞ்சாதே பார்த்தீங்களா இல்லையா ;-)

    ReplyDelete
  2. தல.. அஞ்சாதே நெட்ல ஆன்லைன்ல பார்க்க கிடைக்கவே இல்ல. கடைசில யூ ட்யூப்ல மலையாள டப்பிங்ல பார்த்தேன்

    ReplyDelete
  3. தல.. அஞ்சாதே நெட்ல ஆன்லைன்ல பார்க்க கிடைக்கவே இல்ல. கடைசில யூ ட்யூப்ல மலையாள டப்பிங்ல பார்த்தேன்

    ReplyDelete